இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்; பும்ரா உட்பட 3 வீரர்களுக்கு ஓய்வு


இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்; பும்ரா உட்பட 3 வீரர்களுக்கு ஓய்வு
x

Image Courtesy: AFP

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் ஜனவரி 7-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து இந்திய அணி சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதலில் டி20 தொடரும் அதன் பிறகு ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளது.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 2-ந் தேதியுடன் முடிகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி 6-ல் தொடங்கி பிப்ரவரி 12-ல் முடிகிறது. இந்த ஒருநாள் தொடர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பும்ரா, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியா 3 வீரர்களுக்கு ஓய்வு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிப்ரவரி மாதம் இறுதியில் சாம்பியன்ஸ் டிராபி தொடங்க உள்ள நிலையில் இவர்கள் 3 பேருக்கும் ஓய்வு அளிக்க உள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியாக உள்ளது. பும்ரா பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக ஓவர்களை வீசியுள்ளார். அதற்காக அவருக்கு ஓய்வு அறிவிக்கலாம். பார்மில் இல்லாத ரோகித், விராட் கோலிக்கு ஏன் ஓய்வு அளிக்க வேண்டும் என்ற கருத்து வெளியாகி உள்ளது.


Next Story