ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ஜோ ரூட்


ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ஜோ ரூட்
x

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் 69 ரன்கள் அடித்தார்.

கட்டாக்,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் 2-வது போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும், பென் டக்கெட் 65 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி வருகிறது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் ஜோ ரூட் அடித்த அரைசதம் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 56-வது அரைசதமாக பதிவானது. இதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் இயன் மோர்கன் 55 அரைசதங்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அவரை முந்தி ஜோ ரூட் சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. ஜோ ரூட் - 56

2. இயன் மோர்கன் - 55

3.ஐயன் பெல் - 39

4. பட்லர் - 38

5. கெவின் பீட்டர்சன் - 34


Next Story