அணியில் இடம் கிடைக்காததால் டி20 உலகக்கோப்பையை பார்க்க போவதில்லை - இந்திய இளம் வீரர் சர்ச்சை பேச்சு


அணியில் இடம் கிடைக்காததால் டி20 உலகக்கோப்பையை பார்க்க போவதில்லை - இந்திய இளம் வீரர் சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 3 Jun 2024 1:14 PM IST (Updated: 3 Jun 2024 1:20 PM IST)
t-max-icont-min-icon

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, தனது முதலாவது ஆட்டத்தில் அயர்லாந்துடன் மோத உள்ளது.

புதுடெல்லி,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் 17 வருடங்கள் கழித்து மீண்டும் டி20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களம் இறங்க உள்ளது. அயர்லாந்துக்கு எதிராக தங்களுடைய முதல் போட்டியில் களமிறங்கும் இந்தியா 2-வது போட்டியில் பாகிஸ்தானை நியூயார்க் நகரில் எதிர்கொள்கிறது.

இந்நிலையில் தமக்கு அணியில் இடம் கிடைக்காததால் இந்த உலகக்கோப்பையை தாம் பார்க்கப்போவதில்லை என்று இளம் இந்திய வீரர் ரியான் பராக் தெரிவித்துள்ளார். எனவே இந்தியா வென்றாலும் தோற்றாலும் தாம் கவலைப்படப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-

"செமி பைனலில் விளையாடப் போகும் டாப் 4 அணிகளை பற்றி கணித்தால் நான் ஒருதலைபட்சமாக இருப்பேன். உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் இந்த உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை. கடைசியில் யார் கோப்பையை வெல்கிறார்கள் என்பதை மட்டும் பார்ப்பேன். அதுவே எனக்கு மகிழ்ச்சி. நான் உலகக்கோப்பையில் விளையாடும்போதுதான் யார் டாப் 4 அணியாக வருவார்கள் என்பதைப் பற்றி நினைப்பேன். ஏதோ ஒரு தருணத்தில் என்னை நீங்கள் இந்திய அணியில் எடுப்பீர்கள் அல்லவா? எனவே நான் கண்டிப்பாக இந்தியாவுக்காக விளையாடுவேன். ஆனால் அது எப்போது என்பதை பற்றி கவலைப்படவில்லை" என்று கூறினார்.

அவருடைய இந்த கருத்து ரசிகர்களிடையே சர்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இந்தியாவுக்காக விளையாடா விட்டாலும் நமது நாடு கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே தம்முடைய விருப்பம் என்று ஐபிஎல் முடிந்ததும் சுப்மன் கில் தெரிவித்திருந்தார். அதேபோல ரோகித் சர்மாவின் படைக்கு வீட்டிலிருந்து நான் ஆதரவு கொடுப்பேன் என்று கேஎல் ராகுல் தெரிவித்திருந்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இதுவரை இந்தியாவுக்காக அறிமுகமாகாமல் இருக்கும் இவர் இப்படி பேசியதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.


Next Story