ஆஸ்திரேலிய மண்ணில் அஸ்வின் வேண்டாம்.. சுந்தருக்கு வாய்ப்பு கொடுங்கள் - சைமன் டவுல்


ஆஸ்திரேலிய மண்ணில் அஸ்வின் வேண்டாம்.. சுந்தருக்கு வாய்ப்பு கொடுங்கள் - சைமன் டவுல்
x

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுந்தர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் ஆஸ்திரேலிய மண்ணில் அந்நாட்டு அணிக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

அந்த அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம் பிடித்திருக்கின்றனர். குறிப்பாக தமிழக வீரர்களான அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் மற்றும் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் அஸ்வினுக்கு பதிலாக தற்போதய நியூசிலாந்து தொடரில் அசத்தி வரும் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற வேண்டும் என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டவுல் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "வாஷிங்டன் சுந்தருக்கு பந்துவீச்சில் நல்ல திறமை இருக்கிறது. அதோடு அவர் இருக்கும் உயரத்தில் இருந்து பந்து வீசும்போது நல்ல பவுன்சும் கிடைக்கிறது. எனவே ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு அவர் தகுதியான நபர் என்று நினைக்கிறேன். அவரது பந்துவீச்சு நிச்சயம் ஆஸ்திரேலியா மைதானத்தில் இந்திய அணிக்கு கைகொடுக்கும்.

என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்தியா 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் செல்லக்கூடாது. 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்களாக ஜடேஜா மற்றும் சுந்தர் ஆகியோருடன் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்" என கூறினார்.


Next Story