டி20 உலகக்கோப்பை: வங்காளதேச அணிக்கு எதிராக நெதர்லாந்து பந்துவீச்சு தேர்வு


டி20 உலகக்கோப்பை: வங்காளதேச அணிக்கு எதிராக நெதர்லாந்து பந்துவீச்சு தேர்வு
x

image courtesy: twitter/@BCBtigers

தினத்தந்தி 13 Jun 2024 2:07 PM GMT (Updated: 13 Jun 2024 3:03 PM GMT)

டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்

கிங்ஸ்டவுன்,

அனல் பறக்க நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள 27-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் - நெதர்லாந்து அணிகள் விளையாடுகின்றன. வெஸ்ட் இண்டீசில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற உள்ளது.

டி பிரிவில் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளும் தலா 1 வெற்றி, 1 தோல்வி பெற்றுள்ளதால் இந்த ஆட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்கிறது.


Next Story