டெல்லி அணியில் நான் தக்கவைக்கப் படாததற்கு பணம் காரணம் அல்ல - ரிஷப் பண்ட்


டெல்லி அணியில் நான் தக்கவைக்கப் படாததற்கு பணம் காரணம் அல்ல  - ரிஷப் பண்ட்
x

சுனில் கவாஸ்கரின் கருத்துக்கு ரிஷப் பண்ட் பதிலளித்துள்ளார்.

புதுடெல்லி,

18-வது ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் வருகிற 24, 25-ந்தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறுகிறது. ஐ.பி.எல். ஏலத்திற்கு மொத்தம் 1,574 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். அந்த பட்டியல் 10 அணிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களின் தேவை, விருப்பம் அடிப்படையில் ஆயிரம் வீரர்கள் நீக்கப்பட்டு, மொத்தம் 574 பேர் கொண்ட இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 366 பேர் இந்தியர்கள், 208 வீரர்கள் வெளிநாட்டவர் ஆவர். இவர்களில் 241 வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர்கள்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட்-ஐ அந்த அணி தக்கவைக்கவில்லை. இதனால் அவர் ஏலத்திற்கு வருகிறார் . இவரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரிஷப் பண்ட் டெல்லி அணியால் தக்கவைக்கப்படாததற்கு பணம் ஒரு காரணமாக இருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், சுனில் கவாஸ்கரின் கருத்துக்கு ரிஷப் பண்ட் பதிலளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது

"டெல்லி அணியில் நான் தக்கவைக்கப் படாததற்கு பணம் காரணம் அல்ல என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story