டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி குறித்து மனம் திறந்த மகேந்திரசிங் தோனி


டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி குறித்து மனம் திறந்த மகேந்திரசிங் தோனி
x

2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

மும்பை,

கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு ஜஸ்பிரித் பும்ரா, விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மிக முக்கிய காரணமாக இருந்தனர்.

இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியை தான் எவ்வாறு பார்த்தேன் என்று குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனி மனம் திறந்த சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியை எனது வீட்டில் நான் நண்பர்களுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கியதும் என் நண்பர்கள் அனைவரும் எழுந்து சென்று விட்டனர். மேலும் அதை பார்க்காதே எழுந்து வா இந்தியாவுக்கு எல்லாம் முடிந்தது என்று கூறினர். ஆனால் நான் ஒருவன் மட்டுமே போட்டியை முழுவதுமாக பார்த்தேன். எப்பொழுதுமே கிரிக்கெட்டை பொருத்தவரை கடைசி பந்து முடியும் வரை எதுவும் முடிந்து விட்டதாக நினைப்பது தவறு என்று கூறினேன்.

ஆனால் அவர்கள் என்னை நம்பவில்லை. அதன் பின்னர் நான் சொல்வது சரிதான் என்பதை போட்டி முடிந்ததும் அவர்கள் புரிந்து கொண்டனர். இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் அது எப்போது நடக்கும் என்பதை பொறுத்திருந்து யாரும் பார்க்கவில்லை. தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் ஆர்டர் சற்று வலுவில்லாமல் இருந்ததால் எனக்குள் இந்தியா ஜெயிக்கும் என்ற திடமான நம்பிக்கை இருந்தது" என்று கூறினார்.


Next Story