டேவிட் வார்னர் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கம் - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு


டேவிட் வார்னர் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கம் - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
x

Image Courtesy: AFP

டேவிட் வார்னர் கேப்டனாக செயல்பட விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். இவர் ஐ.பி.எல் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தொடர்ந்து மற்ற லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இவர் கடந்த 2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு, ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டதோடு, எந்த அணிக்கும், கேப்டனாக விளையாட வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது கேப்டனாக டேவிட் வார்னர் மீது விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடை நீக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தடை விதிக்கப்பட்டதிலிருந்து வார்னரின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது. அவர் கணிசமான மாற்றத்தை எதிர்கொண்டதாக தெரிகிறது.

உதாரணமாக அவர் போட்டிகளின்போது ஸ்லெட்ஜ் செய்யவோ அல்லது எதிர் அணியைத் தூண்டிவிடவோ முயற்சிக்கவில்லை. வார்னர் 2018-ல் நடந்ததைப் போன்ற எந்த நடத்தையிலும் ஈடுபட மாட்டார் என்பதில் மறுஆய்வுக் குழு திருப்தி அடைந்துள்ளது. இதன் விளைவாக அவர் இனி கேப்டன் பதவி பெற தகுதி பெற்றுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story