ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்


ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்
x

image courtesy: twitter/@ICC

இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்கிறது.

கோலாலம்பூர்,

2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-6 சுற்றுக்கு தகுதி பெறும்.

இதில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசுடன் இன்று மோதுகிறது. கோலாலம்பூரில் இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சிறப்பாக தொடங்கும் முனைப்புடன் நடப்பு சாம்பியன் ஆயத்தமாகி உள்ளது.


Next Story