ஜடேஜா ஓய்வா..? இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் குழப்பம்
ஜடேஜா ஓய்வு பெற உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, டி20 உலகக்கோப்பையை வென்றவுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
சமீபத்தில் இந்திய அணி தோல்வியை தழுவிய பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்தார். இருப்பினும் பெரிய அளவில் அசத்தவில்லை.
இந்நிலையில் ஜடேஜா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படைத்தை பதிவிட்டு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார். இதனால் ஜடேஜா ஓய்வு பெற உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
அதில், தான் அணிந்திருந்த இந்திய டெஸ்ட் அணியின் ஜெர்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் மேற்கொண்டு அதில் எதுவும் குறிப்பிடவில்லை.
ஒருவேளை தான் ஓய்வு பெற போவதை மறைமுகமாக ஜடேஜா அறிவித்துள்ளாரா? என்று ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். இருப்பினும் அவரது ஓய்வு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.