இது சீனியர் வீரர்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் - ரவி சாஸ்திரி


இது சீனியர் வீரர்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் - ரவி சாஸ்திரி
x

பும்ரா மட்டும் இல்லையென்றால் இத்தொடரில் இந்தியா வீழ்ந்திருக்கும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணிக்கு அச்சுறுத்தலை கொடுத்து வருகிறார். 3 போட்டிகள் முடிவில் இதுவரை 21 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். இவருக்கு அடுத்து இந்தியா தரப்பில் சிராஜ் 13 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

மேலும் 3வது போட்டியிலும் இன்னிங்சை தோல்வியை தவிர்க்க போராடியாக இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் ஆகாஷ் தீப்புடன் சேர்ந்து 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பும்ரா பாலோ ஆனிலிருந்து காப்பாற்றினார்.

அந்த வகையில் பும்ரா மட்டும் இல்லையென்றால் முதல் போட்டியில் தோற்று இந்நேரம் இத்தொடரில் இந்தியா வீழ்ந்திருக்கும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

எனவே அவருக்கு விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய பெரிய வீரர்கள் 4வது போட்டியில் தூங்காமல் விழித்து சுதந்திரமாக விளையாடி கை கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-"இந்தத் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இந்தியாவை தனி ஒருவனாக தற்காத்து வருகிறார். எனவே இந்திய அணியின் சீனியர் வீரர்கள் விழித்துக் கொண்டு களத்தில் களமிறங்க வேண்டும். அவர்கள் அதை செய்வார்கள் என்ற தைரியமான நம்பிக்கை எனக்கு உள்ளது. அதை செய்தால் ஆஸ்திரேலியா தங்களுடைய கையில் பிரச்சினையை கொண்டிருக்கும்.

ஆம் இந்திய அணி அடைக்கப்பட்ட சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்கள். ஆனால் அவர்கள் முழுமையாக வரவில்லை. இருப்பினும் மெல்போர்னில் அவர்கள் சுதந்திர பறவைகள். எனவே பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் அவர்கள் ஆஸ்திரேலியாவை வந்து தாக்கலாம்" என்று கூறினார்.


Next Story