ஐ.பி.எல்; ஏலத்தில் பதிவு செய்தது குறித்து மனம் திறந்த ஜேம்ஸ் ஆண்டர்சன்


ஐ.பி.எல்; ஏலத்தில் பதிவு செய்தது குறித்து மனம் திறந்த ஜேம்ஸ் ஆண்டர்சன்
x

Image Courtesy: AFP

18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது வரும் 24, 25 தேதிகளில் நடைபெறம் என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

லண்டன்,

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது வரும் 24, 25 தேதிகளில் நடைபெறம் என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் சேர்ந்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளன. மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.

இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரரும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல்முறையாக ஐ.பி.எல் ஏலத்தில் பதிவு செய்துள்ளார். 42 வயதான அவரது அடிப்படை விலை ரூ.1.25 கோடியாக நிர்ணயம் செய்துள்ளார். ஆண்டர்சன் டி20 போட்டியில் கடைசியாக 2014-ல் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐ.பி.எல் ஏலத்தில் பதிவு செய்தது தொடர்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. அதனால்தான் ஐ.பி.எல் ஏலத்தில் நான் பதிவு செய்துள்ளேன்.

நான் நல்ல உடல்தகுதியுடன் இருக்கிறேன் என்று நம்புகிறேன். இதுவரை எந்த அணியும் என்னை தொடர்புகொண்டு பேசவில்லை. ஆனாலும் நம்பிக்கையுடன் ஐ.பி.எல் ஏலத்திற்கு காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story