ஐ.பி.எல்.: பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு

image courtesy:twitter/@ICC
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் பெங்களூரு - டெல்லி அணிகள் விளையாடுகின்றன.
பெங்களூரு,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
நடப்பு சீசனில் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பெற்றுள்ள பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. மறுபுறம் டெல்லி அணி தனது முதல் மூன்று ஆட்டங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்று நடப்பு சீசனில் தோல்வியை சந்திக்காக ஒரே அணியாக உள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் வெற்றிபெற போவது யார்? என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பெங்களூரு முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-
பெங்களூரு: பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.
டெல்லி: பாப் டு பிளெசிஸ், ஜேக் ப்ரேசர்-மெக்கர்க், கே.எல். ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் (கேப்டன்), அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், மோகித் சர்மா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்






