ஐ.பி.எல்.2025: குஜராத் அணியின் விக்கெட் கீப்பர் இவர்தான் - கேப்டன் சுப்மன் கில் அறிவிப்பு

image courtesy: PTI
எதிர்வரும் ஐ.பி.எல். தொடருக்கான குஜராத் அணியின் விக்கெட் கீப்பரை சுப்மன் கில் அறிவித்துள்ளார்.
காந்திநகர்,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ெகால்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதையொட்டி 10 அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் வருகிற 25-ம் தேதி மோத உள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் சீசனுக்கான குஜராத் அணியின் விக்கெட் கீப்பரை கேப்டன் சுப்மன் கில் அறிவித்துள்ளார்.
அதன்படி, கடந்த மெகா ஏலத்தில் ரூ.15.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஜோஸ் பட்லர் குஜராத் அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று சுப்மன் கில் அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story