ஐ.பி.எல். 2025; பேட்ஸ்மேனாக களம் இறங்கும் மிட்செல் மார்ஷ்..? - வெளியான தகவல்

Image Courtesy: PTI
ஐ.பி.எல். தொடரின் 18வது சீசன் வரும் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.
கான்பெர்ரா,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
நடப்பு ஐ.பி.எல் தொடருக்கான லக்னோ அணியில் ஆஸ்திரேலிய 20 ஓவர் அணியின் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான மிட்செல் மார்ஷ் இடம் பெற்றிருந்தார். ஆனால், இவர் முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் கடந்த ஜனவரி 7-ந் தேதிக்கு பிறகு எந்தவித போட்டியிலும் பங்கேற்கவில்லை.
இதன் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை போட்டியையும் தவறவிட்டார். இதனால் அவர் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடுவாரா? என்ற சந்தேகம் நிலவியது.
இந்த நிலையில் மிட்செல் மார்ஷ் ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணிக்காக ஒரு பேஸ்ட்மேனாக மட்டும் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பந்து வீசினால் முதுகு வலி பிரச்சினை உருவாக வாய்ப்பு இருப்பதாக டாக்டர் அளித்த ஆலோசனையின் படி அவர் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாட லக்னோ அணி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பெரும்பாலும் அவரை 'இம்பேக்ட்' வீரராக பயன்படுத்துவார்கள் என்று தெரிகிறது.