ஐ.பி.எல்.2025: மும்பை அணியுடன் இணைந்த 'ஹிட்மேன்' ரோகித் சர்மா


ஐ.பி.எல்.2025: மும்பை அணியுடன் இணைந்த ஹிட்மேன் ரோகித் சர்மா
x

image courtesy: PTI

மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சென்னையுடன் மோத உள்ளது.

மும்பை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

அடுத்த நாள் (23-ந் தேதி) சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சந்திக்கின்றன. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் இந்திய கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் வீரருமான 'ஹிட்மேன்' ரோகித் சர்மா மட்டும் அணியுடன் இதுவரை கலந்து கொள்ளாமல் இருந்தார். அண்மையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றவுடன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்ட அவர், மும்பை அணியுடன் இணைவது எப்போது? என்பது தெரியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நேற்று இணைந்துள்ளார். இதனை அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.


Next Story