கிரிக்கெட்டிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஓய்வு அறிவிப்பு
இவர் இந்திய அணிக்காக 18 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ராஞ்சி,
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான வருண் ஆரோன் (வயது 35) அனைத்து வகை போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ஜார்கண்ட் அணியின் வெளியேற்றத்தை தொடர்ந்து அந்த அணியில் விளையாடிய முன்னணி வேகப்பந்து வீச்சாளரான வருண் ஆரோன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணியில் கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகம் ஆன அவர் 18 சர்வதேச போட்டிகளில் விளையாடி அதில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் இந்திய அணியில் கடைசியாக 2015-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்தார். அதன் பின் மோசமான பார்ம் மற்றும் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. ஐ.பி.எல். தொடரில் டெல்லி, பெங்களூரு, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய அணிகளில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.