வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இருந்து இந்திய உள்ளூர் வீரர் ஓய்வு அறிவிப்பு


வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இருந்து இந்திய உள்ளூர் வீரர் ஓய்வு அறிவிப்பு
x

image courtesy: PTI

இவர் ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளில் இடம் பெற்றிருந்தார்.

மும்பை,

இந்திய உள்ளூர் கிரிக்கெட் வீரரான சவுராஷ்டிராவை சேர்ந்த ஷெல்டன் ஜாக்சன் வெள்ளைப்பந்து (டி20 மற்றும் ஒருநாள்) போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். லிஸ்ட் ஏ ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9 சதங்கள் உட்பட 2792 ரன்களும், 84 டி20 போட்டிகளில் ஒரு சதம் அடித்துள்ளார். மேலும் சவுராஷ்டிரா அணிக்காக விஜய் ஹசாரே டிராபி தொடரிலும் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் 38 வயதான அவர் வெள்ளைப்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாக அறிவித்துள்ளார்.

இவர் ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story