மைதானத்தில் ஜாக் கிராலியுடன் மோதிய சுப்மன் கில் - வைரல் வீடியோ


மைதானத்தில் ஜாக் கிராலியுடன் மோதிய சுப்மன் கில் - வைரல் வீடியோ
x

ஓவரின் நடுவே இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலி நேரத்தை கடத்த முற்பட்டார்.

லண்டன்,

இங்கிலாந்து , இந்தியா இடையேயான 3வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 387 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியும் முதல் இன்னிங்சில் 387 ரன்கள் குவித்தது.

இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. 3ம் நாள் ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களே எஞ்சிய நிலையில் இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. பென் டக்கெட் , ஜாக் கிராலி தொடக்க வீரர்களாக களமிறக்கினர். முதல் ஓவரை பும்ரா வீசினார். அப்போது, ஓவரின் நடுவே இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலி நேரத்தை கடத்த முற்பட்டார்.

பும்ரா தொடர்ச்சியாக பந்து வீசுவதை தடுக்கும் வகையில் ஜாக் கிராலி செயல்பட்டதுபோன்ற சூழ்நிலை உருவானது. இதனால் ஆத்திரமடைந்த இந்திய கேப்டன் சுப்மன் கில் , ஜாக் கிராலியுடன் மைதானத்தில் மோதலில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் பென் டக்கெட் சமாதானப்படுத்த முயன்றார். அப்போது, இந்திய அணியினர் திரண்டனர். இதனால், மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியில் இந்திய அணி ஒரு ஓவரை மட்டுமே வீசிய நிலையில் நேரம் நிறைவைந்ததால் 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து 2வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்துள்ளது. ஜாக் கிராலி 2 ரன்னிலும், டக்கெட் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். மைதானத்தில் கில் - கிராலி மோதிய வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


1 More update

Next Story