இந்தியா - இங்கிலாந்து 2-வது ஒருநாள் போட்டி: தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ஆட்டம் மீண்டும் தொடக்கம்


இந்தியா - இங்கிலாந்து 2-வது ஒருநாள் போட்டி:  தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ஆட்டம் மீண்டும் தொடக்கம்
x
தினத்தந்தி 9 Feb 2025 6:42 PM IST (Updated: 9 Feb 2025 6:57 PM IST)
t-max-icont-min-icon

போதிய வெளிச்சமின்மையால் இந்தியா - இங்கிலாந்து 2-வது ஒருநாள் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கட்டாக்,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் 2-வது போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும், பென் டக்கெட் 65 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா அதிரடியாக விளையாடியது. இந்தியா 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் அடித்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ரோகித் 29 ரன்களுடனும், கில் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

கட்டாக் மைதானத்தில் உள்ள ராட்சத மின்விளக்குகளில் ஒன்று பழுதாகி இருந்தது. இதன் காரணமாக போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மின்விளக்கு சரி செய்தவுடன் ஆட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மின்விளக்கு சரி செய்யப்பட்டு ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.


Next Story