இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: 2-0 என்ற கணக்கில் இந்த அணிதான் வெற்றி பெறும் - பனேசர் கணிப்பு


இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: 2-0 என்ற கணக்கில் இந்த அணிதான் வெற்றி பெறும் - பனேசர் கணிப்பு
x

இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

லண்டன்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா - இங்கிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் ஓய்வுக்குப்பின் இந்திய அணி விளையாடும் முதல் தொடர் இது என்பதால் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது. அத்துடன் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து முயற்சிக்கும் என்பதால் இது விறுவிறுப்பை உண்டாக்கி உள்ளது.

கேப்டன்ஷிப்பில் போதிய அனுபவம் இல்லாத சுப்மன் கில்லின் தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் எப்படி விளையாடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அத்துடன் இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே இந்த தொடரில் அசத்தப்போகும் வீரர்கள் குறித்தும், இந்த தொடரின் முடிவு குறித்தும் பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்பினை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இங்கிலாந்து முன்னாள் வீரரான மாண்டி பனேசர் இந்த தொடரின் வெற்றியாளர் குறித்து தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார்.

அவரது கணிப்பின் படி, இந்த தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story