லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்; அரையிறுதியில் பாகிஸ்தானுடன் விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு?


லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்; அரையிறுதியில் பாகிஸ்தானுடன் விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு?
x

முன்னாள் வீரர்கள் பங்கேற்று விளையாடும் உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் டி20 லீக் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

லீட்ஸ்,

2025 உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜென்ட்ஸ் லீக் தொடரின் முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் - பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதவிருந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்திய வீரர்கள் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஹல்காம் தாக்குதல் காரணமாக, ஜுலை 20-ம் தேதி நடக்கவிருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் விளையாட இந்தியா சாம்பியன்ஸ் அணி மறுப்பு தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் விளையாட ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்ஃபான் பதான், யூசுப் பதான் உள்ளிட்ட வீரர்கள் விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த சூழலில் தற்போது இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் அரையிறுதிப்போட்டியில் விளையாடும் சூழல் ஏற்பட்டது.

1 More update

Next Story