மகளிர் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி


மகளிர் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி
x

கேப்டன் ஸ்மிருதி மந்தனா 112 ரன்கள் குவித்தார்.

லண்டன்,

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா 112 ரன்கள் குவித்தார்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 14.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்தை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்திய அணியின் ஸ்ரீஷணி 4 விக்கெட்டுகளை வீழ்த்தார். இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 ஆட்டம் 1ம் தேதி நடைபெறுகிறது.

1 More update

Next Story