பேட்டிங் ஆர்டர் மாற்றி களமிறங்குவதற்கு பழகிவிட்டேன் - கே.எல்.ராகுல்


பேட்டிங் ஆர்டர் மாற்றி களமிறங்குவதற்கு பழகிவிட்டேன் - கே.எல்.ராகுல்
x

Image Courtesy: @IPL

சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 77 ரன் எடுத்தார். சென்னை தரப்பில் கலீல் அகமது 2 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 25 ரன் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 69 ரன் எடுத்தார். டெல்லி தரப்பில் விப்ராஜ் நிஹாம் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, பேட்டிங் ஆர்டர் மாற்றி, மாற்றி களமிறங்குவதற்கு பழகிவிட்டேன். இந்த ஐ.பி.எல் தொடருக்கு முன்பாக டாப் ஆர்டரில் விளையாடுவதற்காக தான் தயாராகி கொண்டிருந்தேன். ஆனால், ஐ.பி.எல் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன், பயிற்சியாளருடன் பேசினேன்.

அப்போது அவர் நம்பர் 4 வரிசையில் பேட்டிங் ஆட வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். முக்கியமான ஒரு வீரர் கடைசி நேரத்தில் வராததால், அந்த இடத்தை எனக்கு அளித்தனர். அதனால் எந்த கவலையும் இல்லாமல், அந்த பணியை தொடங்கினேன். ஆனால், இன்று மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கியது மகிழ்ச்சி அளித்தது. கடைசி நேரத்தில் பேட்டிங் ஆர்டர் மாற்றி ஆட மனநிலை சரியாக வைத்திருக்க வேண்டும்.

அதேபோல் சூழலுக்கு ஏற்ப தயாராகி கொள்ள வேண்டும். அதேபோல் பேட்டிங் செய்வதற்கு முன்பாக சில பயிற்சியை மேற்கொள்வேன். அது உதவியாக இருக்கிறது. பேட்டிங் ஆர்டர் மாற்றப்படும் போது, சில நேரங்களில் செட்டிலாக நேரம் பிடிக்கும். அதுமட்டுமே எனக்கு சவாலாக இருக்கிறது. ஆனால், அதனை மாற்றி கொள்ள தயாராகி வருகிறேன்.

முதல் 2 - 3 பந்துகளில் டாட் வைக்காமல், முதல் பந்தில் இருந்தே அட்டாக் செய்ய தயாராகி வருகிறேன். இன்றைய இன்னிங்ஸில் சிறப்பாக தொடங்கி, மிடில் ஓவர்களில் நிதானமாக இருந்தேன். எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தது என்று சொல்ல வேண்டும். தொடக்கத்தில் போரெல் உள்ளே வந்து ஆட்டத்தின் கட்டுப்பாட்டை எடுத்து கொண்டார்.

அந்த 20 முதல் 25 ரன்கள் போட்டியை சிறப்பாக தொடங்க உதவியது. டி20 கிரிக்கெட் இப்போது மாறிவிட்டது. 7 பந்துகளில் 20 ரன்கள் அடித்தால், விரைவாக ஆட்டத்தை மாற்ற முடியும். அபிஷேக் போரெல், அக்சர் படேலின் ஆட்டம் என் மீதான அழுத்தத்தை குறைத்துவிட்டது. அதேபோல் நாங்கள் தவறான நேரத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்துவிட்டோம்.

சில பவுலர்களை குறி வைத்து அடிக்க முயற்சித்தேன். ஆனால், அது நடக்கவில்லை. கடைசி நேரத்தில் கூடுதலாக 20 ரன்களை சேர்த்திருக்க வேண்டும். அடுத்த முறை அதனை சரி செய்ய முயற்சிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story