ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: டிராவில் முடிந்தால் கோப்பை யாருக்கு..?


ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: டிராவில் முடிந்தால் கோப்பை யாருக்கு..?
x

3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

லார்ட்ஸ்,

டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற ஐ.சி.சி. தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை கைப்பற்றின. இந்த 2 சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது.

இதனையடுத்து தற்போது நடைபெற உள்ள 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி லண்டன் லார்ட்சில் நாளை (புதன்கிழமை) இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி கடந்த ஒரு வாரமாக இரு அணி வீரர்களும் கடும் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

கோப்பையை தக்கவைக்க ஆஸ்திரேலிய அணியும், நீண்ட காலமாக ஐ.சி.சி. கோப்பையை வெல்ல போராடி வரும் தென் ஆப்பிரிக்க அணியும் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இதனிடையே இந்த போட்டி டிராவில் முடிந்தால் கோப்பை யாருக்கு? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

இந்நிலையில் இந்த போட்டி டிராவில் முடிந்தாலோ அல்லது மழை காரணமாக பாதிக்கப்பட்டாலோ கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

1 More update

Next Story