ஐ.சி.சி. டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை: டாப் 10-ல் 5 ஆஸ்திரேலிய வீரர்கள்


ஐ.சி.சி. டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை: டாப் 10-ல் 5 ஆஸ்திரேலிய வீரர்கள்
x

image courtesy:ICC

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தில் தொடருகிறார்.

துபாய்,

இந்தியா-இங்கிலாந்து 3-வது மற்றும் வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா கடைசி டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஜோ ரூட் மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையை பொறுத்த வரை ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தில் தொடருகிறார். இவரையடுத்து ரபடா 2-வது இடத்தில் உள்ளார். 3 மற்றும் 4-வது இடங்களில் ஆஸ்திரேலிய வீரர்களான கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் உள்ளனர். 5-வது இடத்தில் நோமன் அலி உள்ளார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலன்ட் 6 இடங்கள் முன்னேறி 6-வது இடத்துக்கு வந்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். ஆஸ்திரேலிய வீரரான நாதன் லயன் 8-வது இடத்திலும், மிட்செல் ஸ்டார்க் 10-வது இடத்திலும் உள்ளனர். மொத்தத்தில் இந்த தரவரிசையில் 5 ஆஸ்திரேலிய பவுலர்கள் டாப்-10 இடத்திற்குள் ஆக்கிரமித்துள்ளனர். இந்தியா தரப்பில் பும்ராவை தவிர்த்து வேறுயாரும் டாப் 10-ல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story