ஐ.சி.சி. தரவரிசை: புதிய சாதனை படைத்த பும்ரா


ஐ.சி.சி. தரவரிசை: புதிய சாதனை படைத்த பும்ரா
x

இந்திய வீரர் பும்ரா 907 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார்.

மும்பை,

டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டது. இதில் டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் பும்ரா 907 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார்.

இதனால் , ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை வரலாற்றில் அதிக தரவரிசை புள்ளிகள் பெற்ற இந்திய டெஸ்ட் பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் அஸ்வின் 2016-ம் ஆண்டு டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் 904 புள்ளிகள் பெற்றிருந்தார்.இதனை பும்ரா முறியடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் 2வது இடத்திற்கும் , மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் 3வது இடத்திற்கும் முன்னறியுள்ளனர்.


Next Story