ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ஆஸி.வீரர்கள் ஏமாற்றம்


ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ஆஸி.வீரர்கள் ஏமாற்றம்
x

image courtesy:PTI

ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஆடம் ஜம்பா 10-வது இடத்தில் உள்ளார்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ரோகித் சர்மா 2-வது இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் 3-வது இடத்திலும், இந்திய நட்சத்திர வீரர் விராட்கோலி 4-வது இடத்திலும் இருக்கிறார்கள். மற்றொரு இந்திய வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் 8-வது இடத்தில் உள்ளார்.

பந்து வீச்சாளர் தரவரிசையில் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் இரு இடம் முன்னேறி மீண்டும் ‘நம்பர் 1’ அரியணையில் அமர்ந்துள்ளார். இதனால் இலங்கையின் தீக்‌ஷனா 2-வது இடத்துக்கும், 2-ல் இருந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3-வது இடத்துக்கும் சரிந்தனர்.

ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபி, ஜிம்பாப்பேயின் சிகந்தர் ராசா டாப்-3 இடங்களில் மாற்றமின்றி தொடருகிறார்கள். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 10-வது இடத்தில் உள்ளார்.

இதில் ஆச்சரியமளிக்கும் வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலிய வீரர்கள் பெருத்த ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். பேட்ஸ்மேன்கள் பட்டியலில், முதல் 10 இடங்களில் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. பந்து வீச்சிலும் 10-வது இடத்தில் மட்டுமே ஆஸ்திரேலிய அணி வீரர் ஆடம் ஜம்பா உள்ளார். இது தற்சமயம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் பலவீனத்தை காட்டுவதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

1 More update

Next Story