ஐ.சி.சி. தலைவராக பதவியேற்றார் ஜெய் ஷா
ஜெய் ஷா இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக பதவி ஏற்று கொண்டார்
மும்பை,
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளராக இருந்து வந்த ஜெய் ஷா இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக பதவி ஏற்று கொண்டார்.2019 ஆம் ஆண்டு பிசிசிஐ செயலாளராக ஜெய்ஷா முதன் முதலாக பதவியேற்றார். அதன் பிறகு ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவராக இருந்த ஜெய்ஷா தற்போது ஐசிசி தலைவராக பதவியேற்றுள்ளார் .
முன்னதாக ஐ.சி.சி. தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருந்தார். 2020-ம் ஆண்டு நவம்பர் 30-ந்தேதியுடன் அவரது 4 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து, ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story