ஐ.சி.சி. வளர்ந்து வரும் வீரர் விருது 2024: பரிந்துரை பெயர் பட்டியல் வெளியீடு


ஐ.சி.சி. வளர்ந்து வரும் வீரர் விருது 2024: பரிந்துரை பெயர் பட்டியல் வெளியீடு
x

image courtesy: ICC

தினத்தந்தி 28 Dec 2024 4:56 PM IST (Updated: 28 Dec 2024 9:17 PM IST)
t-max-icont-min-icon

2024-ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு 4 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்துள்ளது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் இளம் வீரர்களின் செயல்பாடுகளை கணக்கில் கொண்டு அவர்களுக்கு 'வளர்ந்து வரும் வீரர் விருது' வழங்கி கவுரவித்து வருகிறது.

அந்த வகையில், 2024-ம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்து பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன், இலங்கை பேட்ஸ்மேன் கமிந்து மெண்டிஸ், பாகிஸ்தானின் சைம் அயூப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.


Next Story