விராட் கோலிக்கு எதிராக சிறப்பாக விளையாட விரும்புகிறேன் - வருண் சக்ரவர்த்தி


விராட் கோலிக்கு எதிராக சிறப்பாக விளையாட விரும்புகிறேன் - வருண் சக்ரவர்த்தி
x

Image Courtesy: @KKRiders

ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் கொல்கத்தா-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா,

10 அணிகள் கலந்து கொள்ளும் ஐ.பி.எல். தொடரின் 18வது சீசன் கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதன் காரணமாக, இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் அணி எது என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் வருண் சக்ரவர்த்தி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தன்னம்பிக்கை மிகவும் முக்கியமானது, ஆனால், ஒவ்வொரு புதிய போட்டியின் போதும், உங்களுடைய கடைசி போட்டியை மனதில் வைத்து, நீங்கள் புதிதாக தொடங்க வேண்டும். ஐ.பி.எல் ஒரு வித்தியாசமான விளையாட்டு.

நாங்கள் அனைவரும் இத்தொடரை எதிர்கொள்வதற்கு ஆர்வமாக உள்ளோம். விராட் கோலியை எதிர்த்து விளையாட வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நிச்சயமாக, அவர் எனக்கு எதிராக நன்றாக பேட்டிங் செய்துள்ளார். அதனால் நான் அவருக்கு எதிராக சிறப்பாக விளையாட விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story