டி20 போட்டிகளில் தொடக்க வீரராக விளையாடவே விரும்புகிறேன் - சுப்மன் கில்


டி20 போட்டிகளில் தொடக்க வீரராக விளையாடவே விரும்புகிறேன் - சுப்மன் கில்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 6 July 2024 9:47 AM GMT (Updated: 6 July 2024 10:19 AM GMT)

டி20 போட்டிகளில் தொடக்க வீரராக விளையாடவே விரும்புவதாக சுப்மன் கில் கூறியுள்ளார்.

ஹராரே,

இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ஹராரேயில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஜிம்பாப்வே தொடரில் புதிய கேப்டனாக செயல்பட இருக்கும் சுப்மன் கில் கேப்டன்சி பொறுப்பை ஏற்க்கப்போவது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்திய அணியின் ஜாம்பவான்களான ரோகித் சர்மா, விராட் கோலி போன்று நானும் டி20 போட்டிகளில் தொடக்க வீரராக விளையாடவே விரும்புகிறேன். அதே போன்று கேப்டனாக விளையாடும் போது எதிர்பார்ப்பும், அழுத்தமும் அதிகமாக இருக்கும். விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் கேப்டனாக மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களின் உயரத்தை எட்ட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு இலக்கு இருக்கும். அதே போன்று எனது இலக்கும் கேப்டனாக அணியை சிறப்பாக வழி நடத்த வேண்டும் என்பதுதான். ஐ.பி.எல் தொடரில் கேப்டனாக இருந்த போது ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டேன். தற்போது இந்திய அணிக்கும் கேப்டனாக மாறியுள்ளது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story