மகளிர் உலகக்கோப்பையை இந்தியா வென்றால் இத்தனை கோடி ரூபாய் பரிசு? - பிசிசிஐ திட்டம்


மகளிர் உலகக்கோப்பையை இந்தியா வென்றால் இத்தனை கோடி ரூபாய் பரிசு? - பிசிசிஐ திட்டம்
x

image courtesy:BCCI

தினத்தந்தி 1 Nov 2025 8:04 PM IST (Updated: 1 Nov 2025 8:05 PM IST)
t-max-icont-min-icon

மகளிர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாட உள்ளன.

மும்பை,

இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நவிமும்பையில் நடந்த பரபரப்பான அரையிறுதியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை விரட்டியடித்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 339 ரன் இலக்கை ஜெமிமா ரோட்ரிக்ஸ் (127 ரன், 14 பவுண்டரி), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (89 ரன்) ஆகியோரது அசாத்தியமான பேட்டிங்கால் இந்திய அணி 48.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இதன் மூலம் பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை விரட்டிப்பிடித்த அணி என்ற புதிய சாதனையை இந்தியா படைத்தது.

இந்த சூழலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நவிமும்பை மைதானத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில், தங்களது முதலாவது உலகக்கோப்பைக்காக இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பையை வென்றால் இந்திய மகளிர் அணிக்கு ரூ.125 கோடியை பரிசுத்தொகையாக வழங்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய ஆண்கள் அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசுத்தொகை வழங்கிய நிலையில், மகளிர் அணிக்கும் அதே தொகையை வழங்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story