தற்போது ஹாரி புரூக் உலகின் சிறந்த வீரர் - ஜோ ரூட்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
லண்டன்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2-0 என தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் வரும் 14ம் தேதி ஹாமில்டனில் தொடங்குகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்ற ஹாரி புரூக் பேட்டிங் மிக முக்கியமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் ஹாரி புரூக்கை, இங்கிலாந்தின் முன்னணி வீரர் ஜோ ரூட் பாராட்ட் உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, புரூக் இந்த நிமிடத்தில் உலகத்தின் சிறந்த வீரராக இருக்கிறார். அவரை நான் பிடிக்க முயற்சி செய்கிறேன்.
அவர் சிறந்த வீரர் என்பதால், என்னால் அது முடியவில்லை. அவர் வெளிப்படையாக சிறந்த வீரர்களில் ஒருவர். அவருடன் விளையாடுவதும் அவர் விளையாடுவதை பார்ப்பதும் அருமையானது. கடந்த வாரத்தில் அழுத்தத்திற்கு மத்தியில் சிறப்பாக அடித்த ஒரு சதத்திற்கு பிறகு மீண்டும் அதையே அவர் செய்திருக்கிறார். ஆல்ரவுண்ட் ஆட்டத்தின் மூலம் மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸை கட்டமைத்து இருக்கிறார்.
அவரால் அழுத்தத்தை உள்வாங்க முடியும். அதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அவரால் உங்கள் தலைக்கு மேல் சிக்ஸ் அடிக்க முடியும். மேலும் ஸ்கூப் ஷாட் மூலம் உங்கள் தலைக்கு மேல் சிக்ஸ் அடிக்க முடியும். அவரால் சுழல் பந்துவீச்சிலும் சிறப்பாக விளையாட முடியும் வேகப்பந்து வீச்சிலும் சிறப்பாக விளையாட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.