பவர் பிளேயில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதே ஆட்டத்தை மாற்றியது; பெங்களூரு கேப்டன் படிதர்

பவர் பிளேயில் சென்னை அணியின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதே ஆட்டத்தை மாற்றியதாக பெங்களூரு கேப்டன் ரஜத் படிதர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த 8வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னையை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது.
மோசமான பேட்டிங், கேட்ச்களை தவறவிட்டது, பெங்களூரு அணியின் சிறப்பான பந்து வீச்சு உள்ளிட்டவற்றால் சென்னை படுதோல்வியடைந்தது.
இந்நிலையில், பவர்பிளேயில் சென்னை அணியின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதே ஆட்டத்தின் போக்கை மாற்றியதாக பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
பவர்பிளேயில் முதல் 6 ஓவரில் சென்னை அணியின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினோம். இது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதமகாக உள்ளது. எனது அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பயன்படுத்த வேண்டும் என நினைத்தேன். குறிப்பாக, லிவிங்ஸ்டன் வீசிய 4 ஓவர்களும் மிகவும் சிறப்பாக இருந்தது. சேப்பாக்கத்தில் விளையாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது' என்றார்.