டி20 உலகக் கோப்பையின் சிறந்த அணியை தேர்வு செய்த இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் - ஒரே ஒரு இந்திய வீரருக்கு இடம்


டி20 உலகக் கோப்பையின் சிறந்த அணியை தேர்வு செய்த இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் - ஒரே ஒரு இந்திய வீரருக்கு இடம்
x
தினத்தந்தி 19 Jun 2024 3:10 AM GMT (Updated: 19 Jun 2024 5:59 AM GMT)

லீக் சுற்றின் அடிப்படையில் டி20 உலகக் கோப்பையில் இருந்து சிறந்த அணியை இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் தேர்வு செய்துள்ளனர்.

லண்டன்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன.

லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. இந்த தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - அமெரிக்கா அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் நாசர் ஹூசைன் மற்றும் மைக்கேல் ஆதர்டன் இணைந்து டி20 உலகக்கோப்பையின் லீக் சுற்றின் அடிப்படையில் டி20 உலகக் கோப்பை சிறந்த அணியைத் தேர்வு செய்திருக்கிறார்கள். இந்த அணியில் ஒரே ஒரு இந்திய வீரராக ஜஸ்ப்ரீத் பும்ரா மட்டும் இடம் பெற்றுள்ளார்.

இதில் அவர்கள் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், ஆப்கானிஸ்தானின் ரஹ்மனுல்லா குர்பாஸை தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து ஸ்காட்லாந்தின் பிரெண்டன் மெக்முல்லன், அமெரிக்காவின் ஆரோன் ஜோன்ஸ், ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டாய்னிஸ், தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

தொடர்ந்து வெஸ்ட் இண்டீசின் அகேல் ஹீசைன் மற்றும் அல்ஜாரி ஜோசப், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா, ஆப்கானிஸ்தானின் பசல்ஹக் பரூக்கி மற்றும் இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

மைக்கேல் ஆதர்டன் மற்றும் நாசர் ஹூசைன் தேர்வு செய்த அணி விவரம்:

டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா), ரஹ்மனுல்லா குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்), பிரெண்டன் மெக்முல்லன் (ஸ்காட்லாந்து), ஆரோன் ஜோன்ஸ் (அமெரிக்கா), மார்கஸ் ஸ்டாய்னிஸ் (ஆஸ்திரேலியா), டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா), அகேல் ஹூசைன் (வெஸ்ட் இண்டீஸ்), அல்ஜாரி ஜோசப் (வெஸ்ட் இண்டீஸ்), ஆடம் ஜாம்பா (ஆஸ்திரேலியா), பசல்ஹக் பரூக்கி (ஆப்கானிஸ்தான்), ஜஸ்ப்ரீத் பும்ரா (இந்தியா).


Next Story