முதல் முறையாக ஐ.பி.எல். ஏலத்தில் பெயரை பதிவு செய்த ஜேம்ஸ் ஆண்டர்சன்


முதல் முறையாக ஐ.பி.எல். ஏலத்தில் பெயரை பதிவு செய்த  ஜேம்ஸ் ஆண்டர்சன்
x

Image : AFP 

தினத்தந்தி 6 Nov 2024 3:48 PM IST (Updated: 6 Nov 2024 3:51 PM IST)
t-max-icont-min-icon

ஜேம்ஸ் ஆண்டர்சன் அடிப்படை விலை ரூ. 1.25 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது . ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் இந்த மாத இறுதியில் நடக்க உள்ளது. இந்த தகவல் அனைத்து அணி நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் மெகா ஏலம் நடைபெறும்.

இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் அக்டோபர் 31-ம் தேதி அன்று தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தன. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. பஞ்சாப் 2, பெங்களூரு 3, டெல்லி 4, ராஜஸ்தான் ராயல்ஸ் 6 வீரர்களை தக்க வைத்துள்ளது.

ஆச்சரியம் அளிக்கும் வகையில் ரிஷப் பண்ட் (டெல்லி), லோகேஷ் ராகுல் (லக்னோ), ஸ்ரேயாஸ் அய்யர் (கொல்கத்தா), அர்ஷ்தீப்சிங் (பஞ்சாப்) போன்ற முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.

இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரரும் அந்த அணியின் ஆலோசகருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல்முறையாக ஐ.பி.எல். ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். 42 வயதான அவரது அடிப்படை விலை ரூ. 1.25 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

டி20 போட்டியில் கடைசியாக 2014ம் ஆண்டு ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல். ஏலத்திற்கு 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.


Next Story