77 ஆண்டுகளில் முதல்முறை.. பும்ரா - கம்மின்ஸ் இணைந்து சாதனை


77 ஆண்டுகளில் முதல்முறை.. பும்ரா - கம்மின்ஸ் இணைந்து சாதனை
x

image courtesy: AFP

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் இன்று தொடங்கியது.

பெர்த்,

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இந்த போட்டிக்கான இந்திய அணிக்கு ரோகித் இல்லாத சூழலில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கேப்டனாக செயல்படுகிறார். மறுபுறம் ஆஸ்திரேலியாவுக்கு கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் உள்ளார்.

இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 1947-ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இரு அணிகளுக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டன்களாக இருப்பது 77 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இந்த சாதனையை பும்ரா மற்றும் கம்மின்ஸ் இணைந்து படைத்துள்ளனர்.


Next Story