இந்தியா ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா ஏ 299 ரன்கள் குவிப்பு


இந்தியா ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா ஏ 299 ரன்கள் குவிப்பு
x

இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

பெங்களூரு,

தென் ஆப்பிரிக்கா ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா ஏ-க்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய ஏ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன லெசெகோ செனோக்வானே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜோர்டன் ஹெர்மன் உடன் ஹம்சா கை கோர்த்தார். இருவரும் சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

சிறப்பாக விளையாடி இருவரும் அரைசதம் கடந்தனர். அரைசதம் கடந்த சிறிது நேரத்திலேயே ஹம்சா 66 ரன்களிலும், ஜோர்டன் 71 ரன்களிலும் அவுட்டாகினர். பின்னர் வந்த வீரர்களில் ரூபின் ஹெர்மன் (54 ரன்கள்), தியான் வான் வூரன் (46 ரன்கள்) தவிர மற்றவர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா ஏ 85.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 299 ரன்கள் குவித்துள்ளது. டிஷெபோ மோரேகி 4 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்தியா ஏ தரப்பில் தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.

நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

1 More update

Next Story