முதல் டி20 போட்டி: பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சு தேர்வு

image courtesy:twitter/@BCBtigers
பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது.
மிர்புர்,
வங்காளதேசம் சென்றுள்ள சல்மான் ஆஹா தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அந்த நாட்டு அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி மிர்புரில் உள்ள ஷேர் பங்களா ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:
பாகிஸ்தான்: சைம் அயூப், பக்கர் ஜமான், முகமது ஹாரிஸ், ஹசன் நவாஸ், சல்மான் ஆகா(கேப்டன்), முகமது நவாஸ், குஷ்தில் ஷா, பஹீம் அஷ்ரப், அப்பாஸ் அப்ரிடி, சல்மான் மிர்சா, அப்ரார் அகமது
வங்காளதேசம்: பர்வேஸ் ஹொசைன் எமன், டான்சித் ஹசன் தமீம், லிட்டன் தாஸ்(கேப்டன்), தௌஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், ஜாக்கர் அலி, மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்






