முதல் டி20 போட்டி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்
28 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றது.
ஜமைக்கா,
தென் ஆப்பிரிக்க அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. கேப்டன் பிரண்டன் கிங் அதிகபட்சமாக 85 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹெண்ட்ரிக்ஸ் ஒருமுறம் போராட, மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தது. இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களே எடுத்தது. இதன் மூலம் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றது.