முதல் ஒருநாள் போட்டி: அறிமுக வீரராக களமிறங்கும் நிதிஸ் ரெட்டி


முதல் ஒருநாள் போட்டி:  அறிமுக வீரராக களமிறங்கும் நிதிஸ் ரெட்டி
x

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது.

பெர்த்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டியில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார் அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.இந்த நிலையில் , இந்த போட்டிக்கான இந்திய அணியில் நிதிஸ் ரெட்டி அறிமுக வீரராக களமிறங்குகிறார். அவருக்கு ரோகித் சர்மா ஒருநாள் அணிக்கான தொப்பியை வழங்கினார்.

இந்திய அணி:

ரோகித் சர்மா, கில் (கேப்டன் ), விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் , கே.எல். ராகுல் , அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்ரெட்டி, ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

ஆஸ்திரேலிய அணி:

டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், ஜோஷ் பிலிப் , மேட் ரென்ஷா, கூப்பர் கோனோலி, மிட்செல் ஓவன், மிட்செல் ஸ்டார்க், நாதன் எல்லிஸ், மேத்யூ குஹ்னேமன், ஜோஷ் ஹேசில்வுட்.

1 More update

Next Story