ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடும் விராட் கோலியை காண குவிந்த ரசிகர்கள்

டெல்லி அணிக்காக நட்சத்திர வீரர் விராட்கோலி 12 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கி விளையாடி வருகிறார்
புதுடெல்லி,
ரஞ்சி கிரிக்கெட் தொடரில் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் இன்று தொடங்கியது. டெல்லியில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி-ரெயில்வே அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஆயுஷ் பதோனி பந்துவீச்சை தேர்வு செய்தார் .அதன்படி ரெயில்வே அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
டெல்லி அணிக்காக நட்சத்திர வீரர் விராட்கோலி 12 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கி விளையாடி வருகிறார் . இந்த நிலையில் விராட் கோலியை காண ரசிகர்கள் மைதானத்தில் குவிந்துள்ளனர் . சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் போட்டியை காண வருகை தந்துள்ளனர்.
Related Tags :
Next Story