இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20: இங்கிலாந்தின் ஆடும் அணி அறிவிப்பு


இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20: இங்கிலாந்தின் ஆடும் அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Jan 2025 12:15 AM (Updated: 28 Jan 2025 12:15 AM)
t-max-icont-min-icon

இந்தியா - இங்கிலாந்து 3-வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

ராஜ்கோட்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், சென்னையில் நடந்த 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்தின் ஆடும் அணி (பிளேயிங் லெவன்) அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

பட்லர் (கேப்டன்), பென் டக்கெட், பில் சால்ட், ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், ஜேமி சுமித், ஜேமி ஓவர்டான், பிரைடன் கார்ஸ், ஆர்ச்சட், அடில் ரஷித் மற்றும் மார்க் வுட்.


Next Story