எமர்ஜிங் ஆசிய கோப்பை; இந்தியா 'ஏ' - யு.ஏ.இ அணிகள் இன்று மோதல்


எமர்ஜிங் ஆசிய கோப்பை; இந்தியா ஏ - யு.ஏ.இ அணிகள் இன்று மோதல்
x

Image Courtesy: @ACCMedia1

இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் ‘ஏ’ - ஓமன் அணிகள் மோத உள்ளன.

அல் அமேரத்,

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) கிரிக்கெட் தொடர் ஓமனில் நேற்று தொடங்கியது. அந்தத் தொடரில் இந்தியா ஏ அணி குரூப் - பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்தப் பிரிவில் பாகிஸ்தான் ஏ, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளும் இடம் பிடித்துள்ளது.

குரூப் ஏ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் அணிகளும் இடம் பிடித்துள்ளன. இந்த தொடரில் முதலாவதாக நடைபெறும் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒருமுறை மோதும். அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் இரவு 7 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா 'ஏ' - யு.ஏ.இ அணிகள் மோத உள்ளன. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இந்திய அணி கிட்டத்தட்ட அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

அதேவேளையில் யு.ஏ.இ அணி தனது 2வது வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த ஆட்டத்திற்கு முன்னதாக மதியம் 2.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் 'ஏ' - ஓமன் அணிகள் மோத உள்ளன.


Next Story