தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் பதவியில் இருந்து டுமினி விலகல் - காரணம் என்ன..?


தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் பதவியில் இருந்து டுமினி விலகல் - காரணம் என்ன..?
x

Image Courtesy: @ProteasMenCSA

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அந்த அணியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் (ஒருநாள் + டி20) பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த முன்னாள் வீரர் ஜே.பி.டுமினி அந்தப்பதவியில் இருந்து விலகி உள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் உடனான பரஸ்பர ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஜே.பி. டுமினி வெள்ளைப் பந்து பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து உடனடியாக விலகியுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story