துலீப் கோப்பை டெஸ்ட் தொடர்: அணி மற்றும் வீரர்களின் முழு விவரம்... பி.சி.சி.ஐ. அறிவிப்பு


துலீப் கோப்பை டெஸ்ட் தொடர்: அணி மற்றும் வீரர்களின் முழு விவரம்... பி.சி.சி.ஐ. அறிவிப்பு
x

image courtesy: BCCI

தினத்தந்தி 15 Aug 2024 10:27 AM GMT (Updated: 15 Aug 2024 10:33 AM GMT)

2024-25 துலீப் கோப்பை தொடரின் முதல் சுற்றுக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மும்பை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை தொடரின் 2024-2025 சீசன் செப்டம்பர் 5-ம் தேதி தொடங்க உள்ளது. இதன் முதல் சுற்றுக்கான அணிகள் மற்றும் வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்துள்ளது.

அதன்படி இதில் கலந்து கொள்ளும் அணிகள் ஏ, பி, சி மற்றும் டி என்று பெயரிடப்பட்டுள்ளன. இந்த அணிகளுக்கு சுப்மன் கில், அபிமன்யூ ஈஸ்வரன், கெய்க்வாட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

போட்டியின் முதல் சுற்றுக்கான நான்கு அணிகள் முழு விவரம் பின்வருமாறு: -

அணி ஏ: சுப்மன் கில் (கேப்டன்), மயங்க் அகர்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், கேஎல் ராகுல், திலக் வர்மா, ஷிவம் துபே, தனுஷ் கோட்டியன், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, அவேஷ் கான், வித்வத் கவேரப்பா, குமார் குஷாக்ரா , ஷாஸ்வத் ராவத்.

அணி பி: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட், முஷீர் கான், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், யாஷ் தயாள், முகேஷ் குமார், ராகுல் சாஹர், ஆர் சாய் கிஷோர், மோஹித் அவஸ்தி , என் ஜெகதீசன்.

அணி சி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சாய் சுதர்சன், ரஜத் படிதார், அபிஷேக் போரல், சூர்யகுமார் யாதவ், பாபா இந்திரஜித், ஹிருத்திக் ஷோக்கீன், மானவ் சுதர், உம்ரான் மாலிக், வைஷாக் விஜய்குமார், அன்ஷுல் கம்போஜ், ஹிமான்ஷு சவுகான், மயங்க் மார்கண்டே, மயங்க் மார்கண்டே, ஆர்யன் ஜூவைல் சந்தீப் வாரியர்.

அணி டி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அதர்வா டைடே, யாஷ் துபே, தேவ்தத் படிக்கல், இஷான் கிஷன், ரிக்கி புய், சரண்ஷ் ஜெயின், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாகரே, ஹர்ஷித் ராணா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சென்குப்தா, கே.எஸ். பாரத், சவுரப் குமார்.


Next Story