டெல்லி அசத்தல் பந்துவீச்சு.. பெங்களூரு 163 ரன்கள் சேர்ப்பு


டெல்லி அசத்தல் பந்துவீச்சு.. பெங்களூரு 163 ரன்கள் சேர்ப்பு
x

பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக பில் சால்ட் மற்றும் டிம் டேவிட் தலா 37 ரன்கள் அடித்தனர்.

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூருவில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி - பில் சால்ட் களமிறங்கினர். இதி பில் சால்ட் ஆரம்பம் முதலே அதிரடியில் வெளுத்து வாங்கினார். ஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் 3-வது ஓவரில் மட்டும் எக்ஸ்டிரா உட்பட 30 ரன்கள் வந்தது. இதனால் பெங்களூரு அணி 3 ஓவர்களிலேயே 50 ரன்களை கடந்தது.

இதனால் பெங்களூரு அணி இமாலய ரன் குவிக்கும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் பில் சால்ட் (37 ரன்கள்) ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ஒடி ரன் அவுட் ஆனார். அத்துடன் ஆட்டத்தின் போக்கு மாறியது. பெங்களூரு வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது. படிக்கல் ஒரு ரன்னிலும், விராட் கோலி 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த வீரர்களும் பெரிய அளவில் ரன் அடிக்காததால் பெங்களூரு அணி தடுமாறியது. டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி பெங்களூருவுக்கு நெருக்கடி கொடுத்தனர். லிவிங்ஸ்டன் 4 ரன்களிலும், ஜிதேஷ் சர்மா 3 ரன்களிலும், படிதார் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் இறுதி கட்டத்தில் டிம் டேவிட் (37 ரன்கள்) அதிரடியாக விளையாடி பெங்களூரு அணி நல்ல நிலையை எட்ட உதவினார். இவரின் அதிரடியால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் அடித்துள்ளது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் மற்றும் விப்ராஜ் நிகாம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி டெல்லி களமிறங்க உள்ளது.

1 More update

Next Story