நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி... டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் சில புள்ளிகளை இழந்த இந்தியா


நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி... டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் சில புள்ளிகளை இழந்த இந்தியா
x

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.

துபாய்,

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ளது. இதில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்த இந்தியா (62.82 சதவீதம்) சில புள்ளிகளை இழந்த நிலையில் முதலிடத்திலேயே தொடருகிறது.

ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) 2ம் இடத்திலும், இலங்கை (55.56 சதவீதம்) 3ம் இடத்திலும் உள்ளன. இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற நியூசிலாந்து (50.00 சதவீதம்) ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்திற்கு வந்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா (47.62 சதவீதம்) 5வது இடத்திலும், இங்கிலாந்து (40.79 சதவீதம்) 6வது இடத்திலும் உள்ளன.

இதையடுத்து பாகிஸ்தான் 7-வது (33.33 சதவீதம்), இடத்திலும், 8 முதல் 9 இடங்களில் முறையே வங்காளதேசம் (30.56 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) அணிகள் உள்ளன.

1 More update

Next Story