பகல்-இரவு டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 225 ரன்களில் ஆல் அவுட்


பகல்-இரவு டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 225 ரன்களில் ஆல் அவுட்
x

Image Courtesy: @windiescricket

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 4 விக்கெட் வீழ்த்தினார்.

ஜமைக்கா,

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் 159 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் 133 ரன் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்காவின் கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக கவாஜா, சாம் கான்ஸ்டாஸ் களம் இறங்கினர். இதில் கவாஜா 23 ரன், கான்ஸ்டாஸ் 17 ரன் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து களம் புகுந்த கேமரூன் க்ரீன் 46 ரன், ஸ்டீவ் ஸ்மித் 48 ரன்,டிராவிஸ் ஹெட் 20 ரன், வெப்ஸ்டர் 1 ரன், அலெக்ஸ் கேரி 21 ரன், கம்மின்ஸ் 24 ரன், ஹேசில்வுட் 4 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 225 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் முதல் நாள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 16 ரன் எடுத்துள்ளது. நாளை 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

1 More update

Next Story